Dec 30, 2008

A Mosquito buzzes

வணக்கம் என் அருமை 'ரத்தத்தின் ரத்தங்களே', உங்கள் காதுகளில் ரீங்காரம் செய்வது "கொசு" கோவ்¢ந்தராஜ். நான் இதுக்கு முன்னாடி பேசின "நாய்" நாகராஜன், "காக்கா" கந்தசாமி மாதிரியெல்லாம் மனுஷங்களை குற்றம் சாட்டி அடி மனக்குமுறல்களையெல்லாம் சொல்லி கரைய வைக்கப் போவதில்லை. ஏன்னா மனிதர்கள் தான் என்னுடைய தொல்லை தாங்கமுடியாம குமுறிட்டு இருக்காங்க.




வணக்கம் என் அருமை 'ரத்தத்தின் ரத்தங்களே', உங்கள் காதுகளில் ரீங்காரம் செய்வது "கொசு" கோவ்¢ந்தராஜ். நான் இதுக்கு முன்னாடி பேசின "நாய்" நாகராஜன், "காக்கா" கந்தசாமி மாதிரியெல்லாம் மனுஷங்களை குற்றம் சாட்டி அடி மனக்குமுறல்களையெல்லாம் சொல்லி கரைய வைக்கப் போவதில்லை. ஏன்னா மனிதர்கள் தான் என்னுடைய தொல்லை தாங்கமுடியாம குமுறிட்டு இருக்காங்க.

இந்த மனுஷங்களும் எங்களை அழிப்பதற்கு என்னென்னமோ முயற்சி எடுக்கிறாங்க, உலகம் முழுவதும் கோடிக்கணக்கில பணம் செலவழிக்கிறாங்க. ஆனால் எந்தத் தடை வந்தாலும் நாங்க தகர்த்தெறிஞ்சுட்டு, சாம்பலிருந்து உயிர்த்தெழும் ·பீனிக்ஸ் பறவை போல சிறகடிச்சு பறந்துட்டு தான் இருக்கோம்.மற்ற விலங்குகள், மீன்,பறவைகளையெல்லாம் பிடிக்கிறதுக்கு வலை வீசும் மனுஷனையே வலைக்குள்ள சிறை வச்ச பெருமை எங்களையே சாரும். அதுவும் அந்த வலைக்குள்ள நாங்க நுழைஞ்சுட்டா, அவன் கதி அதோ கதி தான். இப்பல்லாம் நைட் குளிரா இருந்தா நாங்க குளிர் காய்வதே கொசுவர்த்திச் சுருள் புகையில தான், 'குட் நைட்' மேட்டில தான் குட்டித்தூக்கம் போடுறோம். "All Out" அது இதுன்னு ரசாயன பூச்சிக்கொல்லியை உபயோகித்து மனுஷங்க தான் "ஆள் Out" கிட்டு இருக்காங்க!

ஏதோ கடவுள் அருளால பொழைப்பு நல்லாவே போயிட்டு இருக்குங்க. மற்ற ஜீவராசிகள் எல்லாம், தினம் தினம் சாப்பிட்டுக்காக எவ்வளவோ கஷ்டப்படவேண்டியதிருக்கு. ஆனால் எங்களுக்கோ, இந்தியா முழுவதும் நூறு கோடிக்கும் மேலான மனுஷங்க, ஒவ்வொருத்தரும் சராசரியா 5 லிட்டர் எங்க உணவுப்பொருளோட(அதாங்க ரத்தத்தோட) அலைஞ்சிட்டு இருக்காங்க. அதனால எங்களுக்கு உணவுப் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை. தான் உடம்பில ஓடுற ரத்தத்தையே எங்களுக்கு உணவா கொடுக்கிற மனுஷங்களுக்கு எங்களால எதுவுமே திருப்பி தரமுடியல. அதனால தான் ஏதோ எங்களால முடிஞ்ச அளவிற்கு மலேரியா, ·பைலேரியா, டெங்கு என வாரி வழங்கிட்டு வருகிறோம்.

அப்புறம் ஊரெல்லாம் தேர்தல் ஜுரம் அனலா வீசிட்டிருக்கு. நம்ம நாட்டுல மனுஷ ஜனத்தொகையைவிட எங்க ஜனத்தொகை தான் அதிகம்.அப்படியிருக்கும் போது நாங்க ஏன் தேர்தல்ல போட்டியிடக்கூடாது? அரசியல்வாதிகளுக்கும் எங்களுக்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை. நாங்க ரெண்டு பேருமே அப்பாவி மக்களோட ரத்தத்தை உறிஞ்சு தான் பொழைப்பு நடத்துறோம். ஐயா மனுஷங்களா, வெயில் காலம் வந்துருச்சு. சீக்கிரம் ஏதாவது பண்ணி தண்ணீர் தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கோங்க. உங்களை விட எங்களுக்கு தான் தண்ணீர் ரொம்ப அவசியம். உங்களுக்காவது குடிக்க, குளிக்க தான் தண்ணீர் தேவை. எங்களுக்கோ எங்கள் இனத்தைப் பெருக்குவதற்கு தண்ணீர் ரொம்ப அவசியம்.

எங்க அப்பா, தாத்தா காலத்தில் எல்லாம், எங்க ஆளுங்க ஆண்களை தான் அதிகமாக கடிப்பாங்களாம். ஏன்னா பெண்கள் அஞ்சு கெஜம் புடவையை சுத்திக்கிட்டு இருப்பாங்க. இந்த ஆண்கள் தான் வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு வெற்றுடம்போட அலைவாங்க. ஆனால் இப்ப எங்க காலத்துல ஆம்பளைப் பசங்க முழுக்கை சட்டை, கோணியில தைச்ச மாதிரி ஜீன்ஸ் பேண்ட்டு என உடல் முழுதும் மறைச்சுட்டு அலைய, அந்தக் குறையை நவநாகரீக நங்கையர் தான் 'தாரளமயமாக்கல்' கொள்கையோட நாங்க கடிப்பதற்கு இட ஒதுக்கீடு அளித்து தீர்த்து வச்சிருக்காங்க. அப்புறம் இந்த அடுக்கு மாடி கட்டிடங்களா நிறைய கட்டுறாங்க, சரி அப்படியே கொஞ்சம் லி·ப்ட் வச்சு கட்டுனா நல்லது. மூன்று மாடி உயரத்திற்கு மேல பறந்து வர கஷ்டமாயிருக்கு. 

நேத்து ராத்திரி தள்ளாடிக்கிட்டே வந்த ஒருத்தனைக் கடிச்ச பின்னாடி தான் தெரிஞ்சது அவன் "டாஸ்மார்க்"ல இருந்து வர்றான்னு. என்ன சரக்கை அடிச்சானோ, ரெக்கையல்லாம் பின்னுது இன்னும் என்னால நேராக பறக்கமுடியலை. சரிங்க, நான் கிளம்புறேன், அவசரமாக பேங்க் போகவேண்டியிருக்கு. ICICI Bank இல்லைங்க, Blood Bank.ஹி ஹி ஹி. 

From my article Published in Nilacharal.com

Related Posts:


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons